GMCKS
pranichealing - தமிழ் பக்கங்கள்
 

Home
GMCKS
Aura
Sickness cured !
Contact for Courses
What is Pranic Healing ?
Guestbook
Health and energy field
About us the healers
Stress clinic
Pranic healing for learning diability.
Pranic healing for infertile couple.
Pranic healing for women.
Pranic healing for children's diseases.
Pranic healing for old age.
Pranic healing for undiagnosed diseases of children.
No surgery,no touch,no medicine
Pranic healing for all Allergy and Asthma patients.
Pranic healing and Hypnotherapy for all
தமிழ் பக்கங்கள்
ICSI ,IUI , GIFT ,ZIFT .
Aura of man in sickness


Dr. K. R. Gomatthi M.B., B.S., Certified Adolescent Health Counselor, Advanced Pranic Healer and Pranic Psychotherapist, 22, Alagesan Road, Saibaba Mission Post, Coimbatore - 641 011. Tamil Nadu - India Phone: 0422 - 2449934, 0422- 4385110 moblie-7708485038. e mail ID -dr.gomatthi@gmail.com

Aura

மனிதனின் உடல்கள்   3 .

அவை-

1. நம் கண்களால் பார்க்கும் சரீரம்

2. நம் உணர்வால் அறியும் ஒளி உடல்

ஆரா,பிராண உடல் என்றும் சொல்லுவார்கள்.

3. நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணமான மனம்.

மனிதன் தான் அனுபவிக்கும் அனைத்து கஷ்டங்களுக்கும் ,நோய்களுக்கும் தன் சரீரமே காரணம் என்று நம்பி கண்களால் பார்த்து விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளையே நாடி ஓய்ந்து கவலைக்குள்ளாகிறான். பல வியாதிகள் மனதிலிரிந்து ஆரம்பிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை உளவழி உடல் நோய்கள்-psychosomatic disorders என்று பெயரிட்டுள்ளனர்.

இவற்றை மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. மாத்திரை,மருந்து,ஊசி,அறுவை சிகிச்சை,மசாஜ்,எண்ணை குளியல்,மண் சிகிச்சை,வர்மா ,தொடு சிகிச்சை,அக்கு பங்சர், ஹீலிங், உளவியல் சிகிச்சை ஆலோசனை போன்ற பல முறைகளை தனித்தனியே செய்து பலன் கிடைக்காமல் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை தானே மருத்துவர் ஆகியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கத்தில் வாழும் அன்பர் கோடி.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று யார் எதை சொன்னாலும் ஒரு கை பார்த்து விட மனம் தயார் .இந்த ஒரு பிறவியில் இனிமையாக வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது?

அந்த ஆசை தீர இன்று ஒரு வழி சொல்கிறேன்.

முதலில் உங்கள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது என்று ஆராய்ந்து உணருங்கள்.

  1. சரீர நோய்கள் -

காய்ச்சல்,பேதி,வாந்தி ,காயம் கட்டி போன்றவை சரீரத்தில் ஆரம்பிக்கும் நோய்கள்.இவற்றை நல்ல மருத்துவரிடம் காட்டி விரைவில் குணம் பெரலாம்.


  1. பிராண உடல் நோய்கள்-

பிராண உடல் சரிர  உடல் போல நம் கண்களுக்கு தெரியாது .

சூட்சும அணுக்களால் ஆனது . 

பிரபஞ்ச சக்தி என்னும் சக்தி குமிழ்கள் நாம் உட்கொள்ளும் உணவு, தண்ணீர் ,பிராண வாயு இவற்றுடன் சேர்ந்து நம் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாகின்றது .இதை பிராண சக்தி என்றும் கூறுவர் .இந்த சக்தியை உடலுக்கு அதிகம் எடுக்கும் முறையான பயிற்சியாக பிரணயாமம் கடைபிடிக்கப்படுகிறது .இது பல நோய்களுக்கும் ,மன அழுத்தம் நிங்கவும் உதவுவதை நம்மில்   பலர் அனுபவித்திருக்கிறோம் .  

இந்த சக்தியை நம் உடலுக்கு எடுத்துக்கொடுக்கும் வேலையை சக்கரங்களும் ஒளி உடலும் செய்கின்றன .நலமுடன் நம் உடலும் மனமும் இயங்க ஒளி உடலின் ஆரோக்கியம்  அவசியம் என்பது இனி நமக்கு புரியும் .      

சக்கரங்கள் ,நாடிகள் ஆரா இவற்றில் உண்டாகும் சக்தி மண்டல மாற்றத்தால் வரும் நோய்கள். தலைவலி, அடிக்கடி வயிறு பிரட்டி மலம் கழிப்பது ,வாந்தி,கால் எரிச்சல் ,தலை சுற்றல் ,தூக்கமின்மை ,பயம் ,கண் எரிச்சல் ,தொண்டை வலி ,தொண்டை வரட்சி ,படபப்பு ,ரத்தக் கொதிப்பு, தலை நடுக்கம் ,ஆண்மை குறைவு , பெண்களின் செக்ஸ் குறைபாடுகள் ,குழந்தை இன்மை ,விந்தணு குறைபாடு ,அடிக்கடி கரு கலைதல் , திடிரென்று பேச இயலாமை ,நடுக்கம் போன்ற நோய்கள் வர சக்கரங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணம் .இவற்றை மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாது .இந்த நோய்கள் நாள்பட இருந்தால் அவை  சரீர உடலிலும் நிரந்தர நோய்களுக்கான மாற்றத்தை உண்டாக்கும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே முறையான பிராணிக் ஹீலிங் சிகிச்சை முலம் குணப்படுத்தலாம் .  மற்ற எனர்ஜி சிகிச்சைகளான அக்குபங்க்சர் ,வர்மா ,யோகா ,பிராணயாமா  போன்றவை ஓரளவுக்கு நலம் கொடுக்கும்.

ஒளி உடலில்   எந்த அளவு பாதிப்பு உண்டு என்று கண்டு பிடிக்க கிர்லியன் kirlian  போட்டோ உதவும் .சக்கரங்கள் ,உறுப்புகள் ,மண்டலங்கள் எந்த அளவு சக்தி தேக்கி வைத்திருக்கின்றன என்பதும் எந்த அளவு சக்தியை உபயோகிக்கின்றன என்பதும் இந்த பரிசோதனையில் தெரியும் .இந்த டெஸ்ட் ஒரு health horoscope -என்னும் உடல் நலத்திற்கான ஜாதகம் என்றே சொல்லலாம் .ஒவ்வருவரும் இந்த டெஸ்ட் எடுத்து தன் உடல் சக்தி சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்வது நல்லது .    

இந்த எனர்ஜி உடல் சக்கரங்கள் இவற்றை நம் முன்னோர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்    என்பதை பின்வரும் பேச்சு வழக்கைக் கொண்டு அறியலாம் .

1 . இவன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுகிறான் -   மூலாதாரா சக்கரம்  கட்டுப்பாடில்லாமல் இயங்குகிறது என்று அர்த்தம் .

2. வயற்றில் பட்டம் பூச்சி பறக்கிறது .வயிறு பிரட்டுகிறது .இவை வயிற்றுப்பகுதியில் உள்ள சக்கரங்கள் பயத்தில் அதிகம் சுழல்வதை உணர்த்துகிறது.

3 .இவன் தலை  கனம் பிடித்து திரிகிறான்  .ஒருவருடைய கர்வத்தால் அவருடைய தலை சக்கரங்கள் அதிகம் சக்தியை தேக்கி வைத்து  அந்த நபரை மற்றவர்களை மதித்து   புரிந்து அன்புடன் நடந்து கொல்லாத நிலையில் வாழ வைப்பது.   

4. குழந்தை நலங்கி விட்டது .வாந்தி ,பேதி,காரணமில்லாமல் வரும் காய்ச்சல் ,பயந்த மாதிரி வெறித்து பார்க்கும் குணம் ,உடல் எடை மடமடவென குறைவது ,துங்காமல் அழுதுகொண்டே இருப்பது ,எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சல் ,சளி ,எந்த டெஸ்ட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாத உடல் நலக்குறைவு ,போன்றவை இந்த ஒளி உடல் மாற்றத்தால் வருபவை .      உடனே அதற்கு சிறகடித்து ,திருநீர் பிடித்து ,மந்திரித்து கயிறு கட்டவேண்டும் .இல்லை என்றால் அது நோயாக உடலில் பற்றிக்கொள்ளும் . குழந்தை   பிறந்த வீடு  , கரு கலைந்த பெண் உள்ள வீடு ,மரணம் நிகழ்ந்த  வீடு ,நோய் கண்ட  ஒருவர் உள்ள வீடு ,மயானம் ,மருத்துவமனை , என்று பல இடங்களுக்கு குழந்தைகளை  கொண்டு செல்வதை பழங்காலத்தில் தவிர்க்க சொன்னது நினைவிருக்கும். இவை எல்லாமே இளம் குழந்தையின் உடலில் உள்ள சக்தி மண்டலம் எளிதில் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலேயே கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு முறைகள் .

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இன்று முதல் நீங்களும் உங்கள் குடும்ப வழக்கில் உள்ள வாக்குகளை ஆராய்ந்தது மகிழலாம் .ஒரு சொல் விளையாட்டாக இதை மற்றவர்களுடன் பகிர்ந்தது புரிய வைக்கலாம் .     

இந்த நோய்களுக்கு பிராணிக் ஹீலிங் முலம் நிரந்தர ஆரோக்கியத்தை பெறலாம்.ஒளி உடல் ,சக்கரங்கள் இவற்றில் ஏற்படும் நோய்களுக்கு பிராணிக் ஹிலிங் விஞ்ஞான அடிப்படியில் ஆராய்ந்தது முறையாக எந்த ரகசியமும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று .
coimbatoresexologist.com/


  1. மனம்

மனம் என்னும் உணர்வு உடல் தரும்  உணர்வு நிலை நாம் அனைவரும் உணர்ந்ததே.

மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

ஆனால் இந்த மனம் என்பது நம்முடைய உடல்களில் பெரியது என்பது நாம் அறியாத ஒன்று .மனம் என்னும் உடல் சரிர  உடல் போல நம் கண்களுக்கு தெரியாது  . சூட்சும அணுக்களால் ஆனது .

ஆனால் முளை  என்ற உறுப்பு இதற்கு தொடர்புடையது என்பது நமக்கு தெரியும் . இந்த முளை நம் மனதின் இருப்பிடம் என்றும்     மனம் என்னும் உடலின் hardware என்று தற்போது நினைத்துக்கொள்ளலாம் .மனம் என்பது ஆன்மாவின் நுண்ணிய கருவி என்று பிராணிக் ஹீலிங் மாஸ்டர் சோவா கோக் சூயி தன் புத்தகங்களில் எழுதியுள்ளார் .இந்த மனம் வயிற்ருப்பகுதியில் மையம் கொண்டு 12  அடி  விட்டம் கொண்ட பந்து போல நம்மை சூழ்ந்து உள்ளது.  

எண்ணங்கள் மனதில் உருவாகும் சக்தி வடிவங்கள் .மனம் 2  பகுதிகளாக பிரிக்கப்படுகிறது .மன  ஆராய்ச்சியாளர்கள் அதை உணர்வு மனம் ,ஆழ்      உணர்வு மனம்  என்று சொல்கின்றனர் .10 % உணர்வு மனம் ,90 % ஆழ் உணர்வு மனம்  .ஆழ் மனதில் தேங்கி இருக்கும் பல எண்ணங்கள் ஒருவருடைய குணமாகவும், ஆற்றலாகவும் ,நோயாகவும் ,பலமாகவும் ,பலவீனமாகவும் வெளிப்படும் . இதன்  தன்மை  கொண்டே ஒருவருடைய  வாழ்க்கை  நிர்ணயிக்கப்படுகிறது  என்பது உண்மை . 

மனதில் உண்டாகும் எதிர்மறையான எண்ணங்கள் நம் ஒளி உடலில் சக்தி எடுக்கும் தன்மையை மாற்றி விடுகின்றன . சக்கரங்கள் முலம்   உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் எனர்ஜி  குறைந்து    நோய் உருவாக காரணமாய் அமைகிறது    .      

சொரியாசிஸ் ,அரிப்பு ,ஆஸ்த்துமா ,தண்ணீர் பயம் ,ஆகாய விமானத்தில் பறக்க பயம் ,உயரமான இடத்தல் இருந்து கீழே பார்க்க பயம்,பாம்பு ,நாய் ,பூனை,புழு ,இரத்தம் பார்க்க பயம் ,தனியாக  அறையில்  இருக்க பயம் ,,மரண பயம் இப்படி பலவித காரணமற்ற பயங்கள்.

அதிக உடல் பருமன் உண்டாக ,ஏதோ நோய் இருப்பது போன்று நினைத்து பல மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடுவது ,தூக்கமின்மை ,ஆண்மை இல்லாமை ,உடலுறவு செய்ய முடியாது என்று நினைப்பது, குழந்தை பிறக்காது என்று கவலை பட்டு மன அழுத்தம் அடைவது ,யாரோ தன்னை பார்ப்பது, பேசுவது , குறை சொல்வது, திட்டுவது போல உணர்வது போன்ற பல இந்த மனதில் உண்டாகும் பாதிப்பான ,இணக்கமற்ற எண்ணங்களால் உண்டாகின்றன .              

   . மனதில் உருவாகும் எதிர்மறையான   எண்ணங்கள் குறைய  யோகா ,தியானம் போன்றவை உதவும். இதுவே மனதில் ஆழமாக பதிந்து மன அழுத்தத்தை உருவாக்கும் பொழுது பிராணிக் ஹிலிங் ,ஹிப்னோதெரபி சிகிச்சைகள் உதவியாக இருக்கும். 

இப்படி ஆராயும் பொழுது நம் வாழ்வில் உண்டாகும் எந்த தவிப்புக்கும்,நோய்க்கும்,பலவீனத்துக்கும் ,பத்துக்கும்,சுகமின்மைக்கும் ,கவலைக்கும்  ,   படிப்பு,  ஜாபகம் , மனப்பாடம்  செய்யும்  திறமை, தைரியமாக செயல்கள் செய்ய , உறவுகள் மேம்பட ,சகஜமாக வாழ ,கூச்சமின்றி  மக்களுடன் பழக  இப்படி எதற்குமே ,எல்லாவற்றிற்குமே தீர்வு இந்த மனம் சார்ந்த்த சிகிச்சைகள் .       

இப்படி மனிதனின் ஆரோகியத்துக்கு 3 உடல்களின் தன்மையை ஆராய்ந்தது தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் .இதை விடுத்து அனைத்துக்கும்  ஒரு   முறையான   மருத்துவம் சிறப்பு என்று நினைத்து நாட்களை வீணாக்கி உடல் நலனை தொலைத்து நோயில் மடிவதை   இனி கை  விட வேண்டும் .நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான சூட்சும சிகிச்சைகள் , ஆன்மிக அறிவு இவற்றை   நம் சொந்தமாக்கி   வளமான வாழ்வு வாழ்வோமாக . 

                       இதன் படி பார்த்தால் எந்த பிரச்சனைக்கும் 3 உடல்களையும் ஆராய்ந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
coimbatoresexologist.com/
 
Today, you are one of the 143085 visitors (355975 hits)
 
Pranic Healing This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free